முக்கிய செய்திகள்

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள்

இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தான் இந்த அவல நிலை.

இந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடும்.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அருகில் உள்ள சத்துணவு சமையல் அறையில் வைத்த பாடம் நடத்தப்படுகிறது.

அரசுப்பள்ளிகள் டிஜிட்டல் முறைக்கு மாறும் இச்சூழலில் பசும்பொன் வலசையில் அமைந்துள்ள பள்ளி இந்நிலையில் இருப்பது சமூக ஆர்வலர்களிடையேயும், கிராமப் பொதுமக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில அரசு பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாக வரும் தகவலால் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் இப்பள்ளியையும் மூடி விடுவார்களோ என்று ஐயம் கொண்டுள்ளனர்.

பின் தங்கிய கிராமமான பசும்பொன் வலசை அரசு தொடக்கப்பள்ளியில் அரசு கவனம் செலுத்தி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

சில முன்னாள் மாணவர்கள் நன்கொடையாக இப்பள்ளியை கட்டித்தர முன்வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அரசோ அல்லது முன்னாள் மாணவர்கள் நிதியோடு பள்ளியைக் கட்டித்தர ஆவணம் செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.