
அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எளிய பின்புலத்திலிருந்து வந்த அரசு பள்ளியில் படித்து சாதனையை நிகழ்த்திய மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.