
அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது எனவும் ”அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” எனக் கூறினார்.