மலையாள வார பத்திரிகையான கிரஹலட்சுமி, பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது என்பதை வலியுறுத்தி தனது அட்டை படத்தில் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் படத்தை வெளியிட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவர், பத்திரிகைக்கு எதிராக ‘பெண்களை தவறாக சித்தரித்தல்’ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
