பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் நடக்க உள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள், இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் ஒரு வாய்ப்பான தேர்வாகும். குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தற்போது குருப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறையில் உள்ள 1199 காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடக்கவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி கடந்த 10-ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் நவ. 11-ம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வில் கலந்துகொள்ள பயிற்சி அவசியம். தேர்வுக்கான கேள்விகள், எப்படி எழுத வேண்டும், என்னென்ன வகை கேள்விகள் வரும் என்பது குறித்த பலவகைகளில் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்பை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.
எஸ்சி, எஸ் டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களால் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 7 ஆண்டுகளாக இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகுப்பில் பயின்ற 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சிபெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்டு 19 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் நடந்து முதன்மைத் தேர்வுக்கு முன் வாரம் நவ. 4-ம் தேதி வரை நடைபெறும்.
பயிற்சி வகுப்புகள் பாரிமுனையில் உள்ள எண். 7, கச்சாலீஸ்வரர் கோயில் அக்ராஹரம், அரண்மனைக்காரன் தெருவில் நடக்கிறது. இது தவிர தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலும் குரூப்-2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
அனைத்து இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவலை அறிந்துகொள்ளவும் பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
சென்னை : வாசுதேவன். – 9444641712 . கோயம்புத்தூர் : கணேஷ் – 9442060775. கறம்பக்குடி & புதுக்கோட்டை : சுகுமார் – 8098701286, கும்பகோணம் : சுரேந்தர் – 7339306094.
இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர் மேற்கண்ட எண்களைத் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு குறித்தும், தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் விவரம் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்