முக்கிய செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்றது. அந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் இதன் முடிவுகள் வெளியானது.

இத்தேர்வில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

மேலும் குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் நீக்கப்பட்ட 99 தேர்வர்களுக்குப் பதிலாக

புதிய தரவரிசைப் பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு இந்த மாதம் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

புதிய தரவரிசை அடிப்படையில் தேர்வாகியுள்ள தேர்வர்கள் நாளை முதல் 18-ம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முறைகேடு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.