ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட இடத்தில் ஜிசாட்7ஏ செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்ட உடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 வின்னோடம் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இது இந்திய துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்கு Ku பேண்ட் மூலம் தகவல் தொடர்பு வசதியை அளிக்கும்.

ஜி.எஸ்.எல்.வியின் 13வது ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

பிறகு ஆன்போர்டு ப்ரோபல்ஷன் சிஸ்டம் மூலம் இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு சேர்க்கப்படும்.

ராக்கெட்டில் இருந்து பிரிந்து சில நாட்களுக்குப் பிறகு ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.

மொத்தமாக எட்டு ஆண்டுகள் ஆயுட்காலம் பெற்றுள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் நான்காம் தலைமுறை ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி-எஃப்11 மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளது.

முதல் படிநிலையில் 4 லிக்யூடு ஸ்ட்ராப்-ஆன்ஸ், சாலிட் ராக்கெட் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

 

2.2 டன் எடைக்கொண்ட இந்த செயற்கைகோள், இந்தியாவின் 39வது செயற்கைகோள். 2வது படிநிலையில் திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும் ஹை திரஸ்ட் எஞ்சின் இருக்கிறது.

 

3வது மற்றும் இறுதி படிநிலையில் கிரையோஜெனிக் அப்பர் ஸ்டேஜ் உள்ளது என இஸ்ரோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில், இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கபப்ட்ட கிரையோஜெனிக் எஞ்சின் இதில் இடம்பெற்றுள்ளது.

 

க்யூ பேண்ட் பயனாளர்களில் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடிய இதனை இந்திய ராணுவத்தின் தேவைக்காக இந்தியா அர்பணிக்க உள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் போர்க்காலங்களில் வான்வழி தாக்குதல் பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும்.

 

இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புவி வட்டப்பாதையில் இதுவரை 320 ராணுவ பயன்பாட்டுக்கு உதவக்கூடிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

 

அதில் பாதிக்கும் மேற்பட்ட கோள்கள் அமெரிககவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை தவிர்த்து ரஷ்யா, சீனா நாடுகளும் பல ராணுவ பயன்பாட்டுக்குரிய செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தியுள்ளது.

ஜிசாட் 7ஏ செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் திட்டமிட்டப்படி நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கடந்த 35 நாட்களில் இந்தியாவில் ஏவப்பட்ட இஸ்ரோவின் 3 செயற்கைகோள்களும் வெற்றியடைந்துள்ளன.

 

ராக்கெட்டின் பயணம் வெற்றியடைய உழைத்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி. பல புதிய அம்சங்கள் இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.