முக்கிய செய்திகள்

குஜராத் முதல்கட்ட தேர்தல் : 68% வாக்குப்பதிவு…


குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) அமைதியான முறையில் நடைபெற்றது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, இன்றும் இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணியுடன் நிறைவு பெற்றது. 68% வாக்குகள் பதிவானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.