முக்கிய செய்திகள்

குஜராத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரதமர் மோடியின் தாய்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் வந்து வாக்களித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட விவிவிஐபிக்கள் இன்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.