தடை செய்யப்பட்ட குட்கா கள்ளச்சந்தை மூலம் கடைகளில் விற்கப்படுகிறது. இது குறித்து சுாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விடுத்துள்ள எச்சரிக்கையில் நாளை முதல் அனைதது கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்படும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.
தமிழகத்தில் குட்கா இல்லை என்ற நிலை 2 மாதங்களில் உருவாக வேண்டும் என்று தெரிவித்தார். 8 ஆண்டுகளாக முறைகேடாக விற்பனை செய்த ரூ.29.99 கோடி குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் குட்கா எளிதில் கிடைக்கிறது என்றார்.