தமிழக தொழிலாளர்களுக்காக குவைத்திலிருந்து ஓர் அவசர வேண்டுகோள்…


அன்பிற்கினிய…
தமிழக அரசே!
அமைச்சர்களே!
மாவட்ட ஆட்சியர்களே!
தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே!
அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே!
ஊடக உறவுகளே!
சமூக சேவகர்களே!
குவைத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் குவைத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்!

குவைத் கராஃபி நேஷனல் நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கராஃபி தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்வதற்காக குவைத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடந்த புதன்கிழமை (20.01.2018) இரவு குவைத் பாலிவுட் உணவக அரங்கில் ஒன்றுகூடி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கும், கட்சிகளுக்கும் சில வேண்டுகோள்களையும் முன் வைத்துள்ளனர்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் இணைப்பில்… https://www.facebook.com/khaleelbaaqavee/posts/1068161479990365

தாயகம் திரும்பியுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுங்கள்!!

அன்புடன்,
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482