காங்., எம்.பி வசந்தகுமார் கரோனா தொற்றால் காலமானார்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுல் ஒருவருமான வசந்தகுமார் எம்.பி கரோன தொற்றால் தற்போது உயிரிழந்துள்ளார்.

70 வயதான இவர் 2019-ல் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்தில் காங்கிரசுக்கு பெரும் இழப்பு என இந்திய தேசிய காங்கிரசின் தமிழ் மாநில தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், தனி மனித தோழமையிலும் தனக்கு பெரும் இழப்பாக அவரது உயிரிழப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வசந்தகுமாரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

1950-ல் கன்னியாகுமரியில் பிறந்த வசந்த குமார் சாதாரண விற்பனையாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் மளிகைக் கடை ஒன்றை நிறுவினார். பின்னர் தன்னுடைய விடா முயற்ச்சியால் தொழிலதிபராக உயர்ந்தார்.

நீட்,ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனு..

காங்., எம்.பி வசந்தகுமார் மறைவு : ப.சிதம்பரம் இரங்கல்…

Recent Posts