முக்கிய செய்திகள்

லவ் ஜிஹாத் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிறார் இளம்பெண் ஹாதியா

லவ் ஜிஹாத் என்ற பெயரில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இளம்பெண் ஹாதியா உச்சநீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கிறார்.

இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஹாதியாவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கொச்சியில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.

அகிலா அசோகன் என்ற இளம்பெண் ஹாதியாவாக மாறியது எப்படி என்று இன்று அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். தாம் மதம் மாற கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் தமது கணவருடன் வாழ விரும்புவதாகவும் கொச்சியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். தங்கள் மகள், கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக ஹாதியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

Hadiya rush to Delhi to appear in SC today