அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்
தமிழக அரசின் சார்பில் 413 மையங்களில் நீட் தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் 23 -ஆம் தேதி முதல் ஜனவரி 1 -ஆம் தேதி வரை, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வழக்கமாக சனி ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வரும் நிலையில்,
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது..