அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு பணியைத் தொடங்கி வைத்தார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து ஊழியர்களுக்கு வழங்குவர்.

பட்ஜெட் அச்சிடும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அல்வா கிண்டி வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், 2021-22 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் காகிதமின்றி டிஜிட்டல் மூலம் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

ஆனாலும், வழக்கமான முறைப்படி அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு நடைமுறைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அல்வா கிண்டி 2021-22 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

நிதியமைச்சகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..

திருத்தணியில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிவேல் கொடுத்து மரியாதை..

Recent Posts