
காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது.

சென்னை மற்றும் கோவையை அடுத்து தென் தமிழகத்தில் முதன் முறையாக காரைக்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கைத்தறி,கைத்திறன்,துணிநுால் மற்றும் கதர்துறை சார்பாக மாபெரும் கைத்தறி குழும திட்டத்தில் மத்திய அரசின் கீழ் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.1.83 கோடி செலவில் அமைக்கப்பட்ட விற்பனைக்கூடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 30.8.2021 அன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பட்டு,கைத்தறி விற்பனையகத்தில் அமைந்துள்ள கடைகளில் விற்பனையைத் தொடங்கி வைத்தார் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி .

இந்நிகழ்ச்சியில் கைத்தறிதுறை இணைஇயக்குனர் சந்திரசேகர், கண்காணிப்பாளர் மோகனா, ராமகிருஷ்ணன்,காரைக்குடி காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், ராஜீவ்காந்தி நெசவாளர் சங்க தலைவர் பழனியப்பன் பங்கேற்றனர்.

இந்த ஒருங்கிணைந்த வளாகத்தின் சிறப்பு பற்றி ஒரு பார்வை..
இந்த வளாகம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள அனைத்து விற்பனையகங்களும் விசாலமான குளிருட்டப்பட்டவை, வளாகத்தினுள் தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டு,கைத்தறி மற்றும் கதர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற காஞ்சிபுரம்,ஆரணி திருபுவனம் பட்டு சேலை வகைகள், மதுரை சுங்கடி சேலைகள்,திண்டுக்கல் சின்னாளப்பட்டி சுங்கடி, பரமக்குடி கைத்தறி சேலைகள், காரைக்குடி கண்டாங்கி சேலைகள்,கதர் துணிகள்,வீட்டு உபயோக துணி வகைகள் உள்பட பல பொருட்கள் தமிழகத்தில் உள்ள 70 நெசவாளர் சங்கங்கள் சார்பாக நேரடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள 14 கடைகளுமே நெசவாளர் சங்ககள் சார்பாக நடத்தப்படுகிறது.

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குதேவையாக பட்டு சேலைகள்,துணிகள் இந்த வளாகத்தில் நியாயமான விலையில் விற்கப்படுகிறது.

வளாகத்தினுள் உணவகம் செயல்படுகிறது. அதுபோல் சிறுவர் பூங்கா அதில் சேலை எடுக்க வரும் பெண்கள் மகிழ்வுடன் குழந்தைகளை விளையாட வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கார்பார்க்கிங் வசதியுள்ளது.
செய்தி &படங்கள்
சிங்தேவ்