இழப்பீடு வேண்டாம்- பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிடுங்கள்; அரியானா இளம்பெண்ணின் தாயார்..

தன் மகளை சீரழித்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்று அரியானா தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராமைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றவர். அவர் நேற்று முன் தினம் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பும் போது, சிலர் வழிமறித்தனர்.

பின்னர் காரில் கடத்தி சென்று, 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இதையடுத்து அங்கிருந்த மேலும் சிலர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பேருந்து நிலையத்தில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அவளது பெற்றோர், உடனே போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் குற்றவாளிகள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளார்.

மொத்தம் 10 பேர் வரை இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் இருப்பது தெரியவந்துள்ளது.

3 பேரின் புகைப்படங்களை அரியானா போலீசார் வெளியிட்டனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.