முக்கிய செய்திகள்

அரியானாவில் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாபா அமர்புரி கைது.


அரியானா மாநிலத்தில் பதேஹாபாத் என்ற பகுதியில் வசித்து வருபவர் பாபா அமர்புரி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பில்லு. இவர் என்னிடம் வாருங்கள் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்.

என்னிடம் மந்திரம் உள்ளது என ஆசை வாரத்தையால் பலரை மயக்கி உள்ளான். குறிப்பா ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்கள் இவனிடம் சிக்கி உள்ளனர்.

அவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

பாபா அமர்புரியின் வலையில் விழுந்த பல பெண்கள் தங்கள் குடும்பம் பாதிக்கும் என்பதால், வெளியே சொல்லாமே இருந்தனர். கிட்டத்தட்ட 120 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரின் கொடுமைக்கு ஆளான ஒரு பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் பாபா அமர்புரி மீது பல பெண்கள் தைரியமாக புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மீண்டும் அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிட்டத்தட்ட 120 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாதாகவும், பெண்களை மிரட்டி எடுத்த பல ஆபாச வீடியோக்களை கைப்பற்றி உள்ளனர்.

தற்போது பாபா அமர்புரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.