இரண்டு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு தண்டனை: ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக்  ஆசிரமத்தில் நான்கு பெண்களும், குழந்தை ஒன்றும் மர்மமான முறையில் இறந்து கிடந்து சடலங்களாக மீட்கப்பட்ட னர். இந்த விவகாரத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு சாமியார் ராம்பால் கைது செய்யப்பட்டார்.  ராம்பாலின் ஆதரவாளர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பால், இரண்டு வார தாமதத்திற்கு பின்னரே ராம்பால் கைது செய்யப்பட்டார்.

அதே ஆசிரமத்தில் மற்றொரு பெண்ணும் மர்மமான முறையில் இறந்ததால், மேலும் ஒரு வழக்கு சாமியார் ராம்பால் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது .இந்த வழக்குகளில் ராம்பால் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், தண்டனை விவரம் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

Haryana court convicts self-styled godman Rampal in two murder cases

 

திருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமரின் பங்கு குறித்து விசாரணை தேவை: ராகுல் வலியுறுத்தல்..

Recent Posts