தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.
காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் வயது 40 அவர் கடந்த 29ஆம் தேதி தலைவலி மற்றும் சுவாச குறைபாடு ஏற்பட்டு குளோபல் மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .அவருக்கு மூளையின் இரத்தக் கசிவு இருப்பது கண்டறிந்து காரைக்குடியில் முதல்முறையாக தலையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கசிவை சரி செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.
.
மருத்துவர்களின் சாதனை குறித்து குளோபல் மிஷின் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் குமரேசன் அவர்கள் கூறும் பொழுது,

கடந்த 29 ஆம் தேதி நமது மருத்துவமனைக்கு 40 வயது கொண்ட ஒருவர் தலைவலி மற்றும் சிவாச குறைபாடு ஏற்பட்டு வந்திருந்தார் .

அவரை பரிசோதிக்கும் போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் அப்பொழுது அவருக்கு தலையில் ரத்தக்கசிவு இருப்பதை கண்டறிந்து அங்கு சிகிச்சை அளித்து பின்பு வீடு திரும்பி உள்ளார்.

அவருக்கு கடந்த 29-ம் தேதி தலையில் கடுமையான வலி மற்றும் சுவாச குறைபாடு ஏற்பட்டதால் நமது மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதிக்கும் போது ,அவருக்கு தலையில் இரத்தக்கசிவு அதிகமாக இருந்ததால் உடனடியாக மூளை மட்டும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனரை வரவழைத்து தலையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலமாக இரத்த கசிவையும், அழுத்தத்தையும் சரி செய்தோம்.

தற்போது பாதிக்கப்பட்டவர் நலமாக உள்ளார். இந்த மாதிரி அறுவை சிகிச்சைகள் பெரிய நகரில் மட்டுமே நடக்கும். அதுவும் மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் காரைக்குடி மாதிரி ஒரு சிறிய நகரில் நமது மருத்துவமனையில் முதன்முறையாக தலையில் நுன்துளை இட்டு அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

பாதிக்கப்பட்டவர் தற்போது நலமாக உள்ளார். குறைந்த கட்டணத்தில் நமது டைம் ஹல்த்கேர் பவுண்டேசன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என கூறினார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…

செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….

Recent Posts