முக்கிய செய்திகள்

கனமழை எதிரொலி : ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் பள்ளம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் – விழுப்புரம் சாலையில் வனமாதேவி பிரிவு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட பள்ளத்தை கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து சேலம் – விழுப்புரம் பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பள்ளம் சீரமைக்கப்பட்டது. தற்காலிகமாக கற்கள் கொட்டி தண்டவாள பள்ளம் சீரமைக்கப்பட்ட பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றது.

தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பள்ளம் இருப்பது முன்பே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 700 பயணிகள் உயிர் தப்பினர்.