முக்கிய செய்திகள்

நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை..


மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 293வது ஆதினம் என தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறாவிட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும், மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், 292 வது ஆதினம் உயிருடன் இருக்கும்போது 293வது ஆதினம் என குறிப்பிடுவது தவறு. நித்யானந்தா நியமனத்தை திரும்ப பெறுவதாக மதுரை ஆதினம் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.