மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு: மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள் உள்ளன. எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா சமாதியும் உள்ளது. அவருக்கு அதே இடத்தில் நினைவிடம் கட்டும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக விசாரணை செய்யப்பட்டது.

இதற்கிடையே மெரினாவில் நினைவிடம் அமைத்தால் அதன் இயற்கை அழகு சீர்கெட்டுவிடும் எனக்கூறி வழக்கறிஞர் காந்திமதி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து காந்திமதியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Highcourt rejects the petition to Challenge  memmorials in Merina