முக்கிய செய்திகள்

உலகின் மாசுமிக்க நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்..


உலகின் காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இதில் 14 இந்திய நகரங்களும் அடங்கும்.

வீடுகள், தொழில்சாலைகள், விவசாயம், போக்குவரத்து, அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் காற்று சல்பர், நைட்ரேட், கருப்பு கார்பன் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்துள்ளன. உலகில் உள்ள 10 ல் 9 பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிக்கின்றனர். காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் அதிகம் நிகழ்கின்றன.

அதிகம் மாசுபட்ட 14 நகரங்களாக கான்பூர், பரிதாபாத், வாரணாசி, கயா, ஆக்ரா, பாட்னா, லக்னோ, முஷாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.