முக்கிய செய்திகள்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..

தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட்மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் இல்லை. 2-வது முறை நடத்தப்பட்ட சோதனையில் அமைச்சருக்கு கொரோனா உறுதியானதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.