முக்கிய செய்திகள்

இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 75 சதவீத வாக்குப்பதிவு..


இமாச்சலப்பிரதேச இன்று நடைபெற்ற 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். காலை 8 மணிக்குத் தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மேலும் 68 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் டிச.18-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.