முக்கிய செய்திகள்

தேசிய மொழி ‘இந்தி’ என்பது தவறு : ராஜ் தாக்கரே..

இந்தியை தேசிய மொழி என கூறுவது தவறு என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: இந்தி மொழி அழகான மொழி தான். ஆனால் அதை தேசிய மொழி என்று கூறுவது தவறு.

இந்தியை போன்று தமிழ், மராத்தி, குஜராத்தி போன்ற பிற மொழிகளும் இந்த நாட்டின் மொழிகள் தான்.

மஹாராஷ்டிராவில் அம்மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதில் என்ன தவறு இருக்கிறது.

உ.பி.,யில் நாளை ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அம்மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். பீகாரிலும் இதுவே தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.