மக்களை இந்தி ஒருமைப்படுத்தி விடாது : அமித்ஷாவுக்கு ராமதாஸ் கண்டனம்

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் பாமகவும் உள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றும், இன்றும் தெளிவாக சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

இந்தி திணிப்பு விவகாரம் ஆகட்டும், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு ஆகட்டும், அஞ்சல்துறை தேர்வு ஆகட்டும், மத்திய அரசின் எந்தவித அறிவிப்பு வந்தாலும்,

அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ராமதாஸ்

இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது.

பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன,” என்று பதிவிட்டுள்ளார்.

எந்த கூட்டணியில் இருந்தாலும் சரி, இந்தி திணிப்பினை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது என்ற நிலைப்பாட்டில் ராமதாஸ் என்றுமே உறுதியாக உள்ளார். அதனால்தான் டாக்டரின் இந்த அதிரடி ட்வீட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.