இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சி அரசியல் சட்டத்திற்கு எதிரானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

“இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியை பயிற்று மொழியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய இந்தியை புகுத்தி ஒன்றிய அரசு இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம்.
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம். இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரை காத்திட வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும்.
அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்…

காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…

Recent Posts