முக்கிய செய்திகள்

இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது: ஐஜி பொன்.மாணிக்கவேல் விளக்கம்


சிலை முறைகேடு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த கவிதா கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர், ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கவிதாவை கைது செய்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல் நேரடியாக கைது செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததால், கைது செய்ததாக பொன். மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.