முக்கிய செய்திகள்

ஹாங்காங் ஓபன்: போராடித் தோற்ற சிந்துவுக்கு வெள்ளி!

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் போராடி தோற்ற இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான டாய் ட்ஸூ யிங்குடன் (சீன தைபே) நேற்று மோதிய சிந்து 18-21, 18-21 என்ற நேர் செட்களில் தோற்று 2வது இடம் பிடித்தார்.

இப்போட்டி 44 நிமிடங்களுக்கு நீடித்தது. நடப்பு சீசனில் 4வது பைனலில் விளையாடிய சிந்து, 2வது தோல்வியை சந்தித்தார். உலக சாம்பியன்ஷிப் பைனலில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவிடம் தோற்ற அவர், ஹாங்காங் பைனலில் டாய் ட்ஸூவிடம் வீழ்ந்தார். இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார். சிந்துவுடன் மோதியுள்ள 11 போட்டிகளில் டாய் ட்ஸூ யிங் 8-3 என முன்னிலை வகிக்கிறார்.

Hongkong open : Sindhu Win silver