
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களுடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மிகப் பெரிய நட்சத்திர விடுதிகளில் கூட வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்க கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை அமைப்பதில்லை,வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
