எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? 2015, 2019 முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக்கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று வந்தது.

அப்போது முதலீட்டாளர் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றும்,

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்றும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

2015ம் ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? என்றும் சரமாரி கேள்வி எழுப்பியது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு பற்றியும் அறிக்கை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் காலை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு பங்கேற்ற மாநாட்டின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்புரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றும்,

அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மாநாடு முழு வெற்றி பெற்றுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக்கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையில் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது : கமலஹாசன் ..

10 இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..

Recent Posts