முக்கிய செய்திகள்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர். இதேபோல், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதனிடையே, அறிவாலயத்திற்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும்,  நாளை முடிவடையும் என்றும் தெரிவித்தார். இடப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாகவே நடைபெற்று வருவதாகவும் வைகோ கூறினார்.