முக்கிய செய்திகள்

கட்டிப்புடி வைத்தியம் வேலை செய்யவில்லை மோடி அவர்களே: ராகுல் கிண்டல்

ட்ரம்பை நீங்கள் கட்டிப்பிடித்தது போதவில்லை மோடி அவர்களே, இன்னும் அதிகமாக கட்டிப்பிடியுங்கள் என ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார்.

பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த   லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சையது விடுவிக்கப்பட்டுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “ட்ரம்பை நீங்கள் கட்டிப்பிடித்தது போதவில்லை மோடி பாய்.. இன்னும் கட்டிப்பிடியுங்கள்” எனக் கிண்டலடித்துள்ளார். பாகிஸ்தான் அரசு லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதியுதவி செய்வதாக கூறப்பட்டதை அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு ஏற்க மறுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாகவே மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையதை பாகிஸ்தான் அரசு சுதந்திரமாக உலவ விட்டிருப்பதாக ராகுல் அதில் விமர்சித்துள்ளார். இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுத்துள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் என்பவர், ஹபீஸ் சையது விடுவிக்கப்பட்டதை ராகுல் காந்தி பாராட்டுகிறாரா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

Hugplomacy Fail”: Rahul Gandhi