நாம் எம்ஜிஆர்களைக் கொண்டாடுகிறோம்… அவர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்…!

நமது ஊரில் தேர்தல் பிரச்சாரங்களிலும், விழாக்களிலும் எம்ஜிஆரைப் போல பலர் வேடமிட்டு மக்களை மகிழ்விப்பதைப் பார்த்திருக்கிறோம். நடிகர்களைக் கொண்டாடிப் பழகிவிட்ட நமது “பண்பாட்டில்” எழுத்தாளர்களைக் கொண்டாடும் பழக்கத்திற்கு எப்போதுமே இடம் இருந்ததில்லை. அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெமிங்வேயைப் போல வேடமிட்டு அவரைக் கொண்டாடி உள்ளனர். கடலும் கிழவனும் என்ற புகழ்பெற்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வையின் பிறந்த நாளும், மறைந்த நாளும் ஜூலை மாதத்தில் (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) தான் வருகிறது. இதையொட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மூன்று நாட்கள் கி வெஸ்ட் தீவில் நடைபெற்ற விழாவில் ஹெமிங்வேயைப் போலவே உள்ள பலர் வேடமிட்டு வந்து போட்டியி்ல பங்கேற்றனர். இதில்,  அமெரிக்காவின் புகழ் பெற்ற சமயைல்கலை வல்லுநரான பவுலா தீனின் கணவர் மைக்கெல் குரூவர் முதல்பரிசைத் தட்டிச் சென்றார். அச்சு அசலாக ஹெமிங்வேயைப் போலவே இருந்த அவருக்கு நடுவர்கள் ஹெமிங்வேயின் சிறிய சிற்பத்தையே பரிசாக வழங்கி கௌரவித்தனர். இந்தப் பரிசைப் பெற்றதற்காக, பவுலா தீன் தமது 63 வயது கணவர் மைக்கேல் குரூவரை உதட்டோடு, உதடு வைத்து முத்தமிட்டு பாராட்டினார். எதற்கெடுத்தாலும் அமெரிக்கக் கனவில் மிதக்கும் நம்மூர் இளசுகள் இந்த விஷயத்திலும் அந்த நாட்டைப் பின்பற்றலாமே… எழுத்தாளர்களைக் கொண்டாடும் பண்பாட்டு முதிர்ச்சி பெற்ற சமூகமாக நாம் எப்போது பரிணமிக்கப் போகிறோம்…?  

Husband of celebrity chef Paula Deen wins Hemingway contest