கணவன், மனைவி உறவில் கட்டபஞ்சாயத்து தலையீடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு …


வடமாநிலங்களில் ’கப்’ பஞ்சாயத்து என்று கூறப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் அதிகளவில் செயல்படுகின்றன. இவை ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்படுவதால் ஏராளமான ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது. மேலும் கணவன், மனைவி உறவு சிக்கலில் கட்டபஞ்சாயத்து தலை நுழைப்பதால், அதிகமான மனித உரிமை மீறல்கள் நடப்பதாகசங்கி வாகினி என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் கணவன், மனைவி உறவுக்குள் மூன்றாவது நபர்களான கிராம பஞ்சாயத்து தலையிடுவது தவறுஎன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இதனை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.