மும்பையில் இருந்து புனே செல்ல ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெறுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதன்மூலம் மும்பையில் இருந்து புனே இடையே ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து, வரும் 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 150 கி.மீ தூரத்தை ஹைப்பர்லூப் மூலம், வெறும் 25 நிமிடங்களில் கடந்து விடலாம்.
கடந்த 2012ஆம் ஆண்டில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் முதல் முறையாக ஹைப்பர்லூப் திட்டம் குறித்து அறிமுகம் செய்தார்.
முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட், வடக்கு ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஹைப்பர்லூப் ஒன் தொழில்நுட்பம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.