முக்கிய செய்திகள்

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: அனைவரும் விடுதலை


ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்து ஐதராபாத் என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேவேந்தர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அசிமாநந்தா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.