முக்கிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், தஞ்சை கத்தரிநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோன்று தஞ்சை அழகிய நாயகிபுரம் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.