முக்கிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை 274 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்த திட்டமானது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் மற்றும் கடலோர பகுதியில் உள்ள மீனவ கிராமங்களின் மீன் வளங்கள் பாதிக்கும் என, அத்திட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.