முக்கிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் பிரதமர் மோடி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தஞ்சை சிலைகள் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ரேசன்கடையில் ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்க பார்ப்பதாக திருவாரூரில் கி.வீரமணி பெட்டியில் தெரிவித்தார்.