முக்கிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது : திருவாரூர் மாவட்ட விவசாயிகள் …

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலம் கொடா இயக்கம் துவங்கப்பட்டது.

இதனை துவக்கிவைத்து பேசிய, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதிக்கமாட்டேன் என உறுதி அளித்திருந்தார்.

அவருடைய ஆட்சியை பின்பற்றுகிற எடப்பாடி பழனிச்சாமி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிப்பார் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்தி வருவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.