ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., “ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.