ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து இன்று தீரப்பளித்த நீதிபதி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007 மே 18ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.
பின் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் வெடிக்காத நிலையில் இருந்த மேலும் இரு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில் சாமியார் அசிமானந்த், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளான தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார்.