முக்கிய செய்திகள்

தேசபக்தி குறித்து யாருக்கு யார் சொல்லித் தருவது: மோடியை சாடிக் குதறிய குமாரசாமி

தேசபக்தி குறித்து பிரதமர் மோடி சொல்லித் தர வேண்டியதில்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமக்கு தேசபக்தி இல்லை என கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள குமாரசாமி, தமது தந்தே தேவகவுடா பிரதமராக இருந்த போது காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழ்ந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அதுவே தங்களது தேசபக்திக்கான பாரம்பரியம் எனக் கூறியுள்ள குமாரசாமி, தங்களை தேசபக்தியற்றவர்களாக சித்தரிக்க மோடி முயல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான தகுதியோ, உரிமையோ மோடிக்கு இல்லை குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.