முக்கிய செய்திகள்

நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..


நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாததற்கு எதிா்ப்பு தொிவித்து தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரை ஆற்றினாா்.

முன்னதாக சசிகலாவின் சகோதரா் திவாகனர் பேசுகையில், டிடிவி தினகரன் குடும்ப உறுப்பினா்களுக்காக புதிய கட்சியை தொடங்கி உள்ளாா். அவரது கட்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருடன் இனி இணைந்து செயல்பட மாட்டோம் என்று தொிவித்து இருந்தாா்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய டிடிவி தினகரன், என்னை பொறுத்தவரையில் கட்சி வேறு, குடும்பம் வேறு. நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன். கட்சியினரோ, குடும்பத்தினரோ யாருடைய சதியிலும் விழுந்து விடக்கூடாது. அமமுக பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சாித்துள்ளாா்.