நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல :அருந்ததி ராய் விளக்கம்..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டது.

ஆனால் இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எதிர்ப்பையடுத்து எம்.ஏ.ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் அருந்ததிராய் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து எழுதியிருந்தார்.இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்கலை. குழுவின் முடிவுப்படி அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

4 வருடமாக இருந்த பாடம் நான்கே நாட்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததிராயின் புத்தகத்திற்கு பதிலாக எழுத்தாளர் கிருஷ்ணனின் My Native Land என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘பாடத் திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்கு தெரியும்.இலக்கியங்கள் தொடர்பாக இப்போதைக்கு அரசு காட்டும் அலட்சியப் போக்கு மிகப் பாதகமானது.

நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல. இலக்கியங்களின் முக்கியத்துவம் அதன் வாசகர்களின் ஆதரவைப் பொறுத்துதான் இருக்கிறது,’ எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

Recent Posts