முக்கிய செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்ட டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் கைப்பற்றி,

லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் பழிவாங்கும் வகையில்,

தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளரான டாக்டர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த “அதிகாரிகள் மாறுதல்”திருவிளையாடல்கள் என கேள்வியெழுப்பியுள்ள அவர், 2400 கோடி ரூபாய் மதிப்புள்ள மிக முக்கியமான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் கிடைக்கவில்லையா? எனவும் கேட்டுள்ளார்.