முக்கிய செய்திகள்

ஐசிசி யு-19 உலக கோப்பை : இந்திய அணி அரையிறுதிற்கு தகுதி..

ICC U-19 World Cup 2018, India vs Bangladesh, Super League Quarter-Final, IND win by 131 runs


ஐசிசி யு-19 உலக கோப்பை கால் இறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 265 ரன்கள் நிர்ணயித்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மான் கில் 86, அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணியில் ஒனிக் 3, நயீம் ஹசன், ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி 41.2வது ஓவரில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது..